கோவை: அத்திக்கடவு - அவினாசி திட்டம் கோவை, திருப்பூர், ஈரோடு மக்களின் 60 ஆண்டு கனவாகும். முதலமைச்சரின் அரசாணையின் படி இப்பணிகள் 2021 என்ற இலக்கை நோக்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ரூ.1652 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவினாசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான குளங்கள், ஏரிகள், பவானி நீரால் நிரப்பப்படுகிறது. இதில் கோவை மட்டுமல்லாமல் கௌசிகா நதியில் உள்ள குளங்கள், ஏரிகள் மற்றும் குட்டைகளும் வளம் பெறும்.
இது குறித்து திட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம் அவர்களிடத்தில் பேசினோம். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. பவானி ஆற்றின் காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து ஆண்டொன்றிற்கு 1.50 டிஎம்சி உபரி நீரை நீரேற்று முறையில் மூன்று மாவட்டங்களில் உள்ள மொத்தம் 24,468 ஏக்கர் நிலம் பயன் பெறும் வகையில் 32 பொதுப்பணித்துறை ஏரிகள்,42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குட்டைகள் நீர் நிரப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 6 நீரேற்று நிலைகளுக்கான நிலம் எடுப்பு பணிகளும் முடிவு பெற்று இருக்கிறது. நீரூற்றுக்குத் தேவையான மின்சக்தியை சோலார் மூலம் பெறப்படுவதற்கான திட்டமும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தகவல்களை அறிய கௌசிகா நதி ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் அவர்களிடம் பேசினோம். இதுகுறித்து அவர் கூறுகையில், இத்திட்டத்தின் மூலம் கோவையில் இயற்கை வளம் மேன்மேலும் அதிகரிக்கும்.
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் மூலமாக கௌசிகா நதி மற்றும் அதை சார்ந்த நீர்நிலைகளும் வளம் பெற போகின்றன. அதற்கான புல எண்கள் தரப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதில் உள்ள எண்களின் அடிப்படையில் மக்கள் தங்களாகவே வந்து அவர்களின் கிராமத்தில் உள்ள நீர்நிலைகளில் தடுப்பணை, குளங்கள், குட்டைகளின் கரைகளை உயர்த்துதல், தடுப்பணைகளைச் சரி செய்தல், சீமை கருவேல மரங்களை அகற்றுதல் போன்ற வேலைகளை சீரமைக்க வேண்டுகிறோம். இந்த திட்டமானது டிசம்பர் 2021 என்ற இலக்கை நோக்கி வேகமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார அமைப்புகள் அனைவரும் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கி வருகிறார்கள். ஊர் கூடி நீரை காப்பாற்ற வேண்டிய உயிர் தேவை நம்மிடத்தில் உள்ளது என தெரிவித்தார்.