கோவை மண்டலத்தில் தொழில் நிறுவனங்களுக்கு ரூ1000 கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளதாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் தகவல்!

கோவை: கோவை மண்டலத்தில் தொழில் நிறுவனங்களுக்கு ரூ1000 கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளதாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ஜி.கே செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மண்டலத்தில் தொழில் நிறுவனங்களுக்கு ரூ1000 கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளதாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ஜி.கே செல்வக்குமார் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது :-

பிரதமர் மோடி சுய சார்பு பாரதம் திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டம் மூலம் தொழில்நுட்பம், டெமோகிராபி பொருளாதாரம், உட்கட்டமைப்பு, பாதுகாப்பு என்பன உள்ளிட்ட ஐந்து வகையான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக ஐந்து கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மொத்தமாக 20 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

எஸ்.சி, எஸ்.டி, ஒ.பி.சி என பிரிவினருக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. லண்டனில் சட்ட மேதை அம்பேத்கர் வசித்த வீடு மத்திய அரசால் வாங்கப்பட்டுள்ளது. அங்கு எஸ்.டி, எஸ்.சி பிரிவு மாணவர்கள் படிப்புக்காக செல்லும் போது அந்த வீட்டில் தங்கி படிக்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல, இந்தியாவில் 52 சதவீதம் உள்ள ஒ பி சி. பிரிவினர்களுக்காக 27 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.37 லட்சம் இலவச கேஸ் இணைப்பு பெண்களுக்கு தரப்பட்டுள்ளது.

கோவை மண்டலத்திற்கு ரூ1000 கோடி நிதி உதவி தொழில் நிறுவனங்களுக்கும், சிறு,குறு தொழில்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு 25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 18 கோடி விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இலவச மின்சார திட்டத்தை பா.ஜ.க அரசு என்றும் ரத்து செய்யாது என்று அவர் தெரிவித்தார். 

இந்த சந்திப்பின் போது, மாவட்ட தலைவர் ஆர் நந்தகுமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ரமேஷ்குமார், தாமு, செய்தி தொடர்பாளர் சபரி, துணைத்தலைவர் மதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...