கோவை அடுத்த சூலூர் அருகே சமூக இடைவெளியை பின்பற்றாத 7 ஆவின் பாலகங்களுக்கு சீல் வைப்பு!

கோவை: கோவை அடுத்த சூலூர் அருகே சமூக இடைவெளியை பின்பற்றாத 7 ஆவின் பாலகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோவை: கோவை அடுத்த சூலூர் அருகே சமூக இடைவெளியை பின்பற்றாத 7 ஆவின் பாலகங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆவின் பாலகங்கள் செயல்பட்டு வருகிறது. ஆவின் பாலகங்களில் ஐந்து ரூபாய்க்கு தேநீர் விற்கப்படுவதாலும் பலகாரங்கள் குறைந்த விலையில் விற்கப்படுவதால் பல இடங்களில் அதிகளவில் வியாபாரம் நடைபெற்று வருகிறது. 

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் சில தளர்வுகளுடன் கடைகள் இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவை பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்.

இந்நிலையில், கோவையை அடுத்த சூலூர் பகுதியில் இயங்கி வந்த ஆவின் பாலகங்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் செயல்படுதாக கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. செயல் அலுவலர் செந்தில் தலைமையில் சூலூர் பகுதியில் இயங்கி வரும் ஆவின் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது, அரசு விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியை பின்பற்றாமல் இயங்கிய ஏழு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அரசின் விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...