கோவை: கோவையில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் பிரபல நகைக்கடையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் பிரபல நகைக்கடையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் என்ற பிரபல நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இங்கு பணியாற்றும் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கடைக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும், கடையின் கதவுகள் சாத்தப்பட்டு உள்ளது. நகைகள் அனைத்தையும் பாதுகாப்பு அறைக்கு மாற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.