திருப்பூர்: திருப்பூரில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ள நிலையில், சுகாதாரத்துறை சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டு வரும் சூழ்நிலையில் லட்சுமி நகர் பகுதியில் 81 வயது முதியவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். மேலும், அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.