கோவையில் மூலிகை மைசூர்பா மூலம் ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தலாம் என விளம்பரம் செய்த ஸ்வீட் கடையின் உரிமம் ரத்து!

கோவை: கோவையில் மூலிகை மைசூர்பா மூலம் ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தலாம் என விளம்பரம் செய்த ஸ்வீட் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவையில் மூலிகை மைசூர்பா மூலம் ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தலாம் என விளம்பரம் செய்த ஸ்வீட் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் நெல்லை லாலா ஸ்வீட்ஸ் என்ற இனிப்பு கடையை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மூலிகை மைசூர்பா மூலம் ஒரே நாளில் கொரோனோவை குணப்படுத்தலாம் என துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்து வந்தார். இது சமூக வளைதளங்களில் வேகமாக பரவியது. இது குறித்த தகவலின் பேரில் தொட்டிபாளையம் பகுதியிலுள்ள இனிப்புகடைக்கு சென்ற உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சுகாதாரத் துறையினர், சித்த மருத்துவ துறையினர் சோதனை மேற்கொண்டனர்.



அதில் முறையான அனுமதி இல்லாமல் 18 வகையான மூலிகை பொருட்களை பயன்படுத்தி ஸ்ரீராம் மைசூர்பா தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் பேரிடர் காலத்தில் சொந்த விளம்பரத்திற்காக மூலிகை மைசூர்பா என்ற பெயரில் கொரோனாவை குணப்படுத்தலாம் என போலியான தகவல்களை வெளியிட்டதை உறுதி செய்தனர். இதனையடுத்து மைசூர்பா மற்றும் மூலிகைப் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்கு சீல் வைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறுகையில், தவறான தகவல்களை பரப்பியதற்காக கடை உரிமையாளர் ஸ்ரீ ராம் மீது உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மூலிகை மைசூர்பா விற்பனை செய்ய எவ்வித அனுமதியும் பெறவில்லை என தெரிவித்தார்.

மேலும், ஸ்வீஸ்ட் கடையின் உரிமம் இரத்து செய்திருப்பதாகவும் சித்த மருத்துவ துறை அதிகாரிகள் மைசூர்பாவை பறிமுதல் செய்து, ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ய உள்ளதாகவும் ஸ்ரீ ராம் மீது காவல் நிலையத்தில் புகாரளித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே, பேரிடர் காலத்தில் மக்களை திசை திருப்பும் வகையில் விளம்பரம் செய்யப்பட்டு இருப்பதாகவும் மூலிகைகளின் பெயர்கள் கூட கடை உரிமையாளருக்கு தெரியவில்லை எனவும் மாவட்ட சித்த மருத்துவ துறை அலுவலர் தனம் தெரிவித்தார். மூலிகை மைசூர்பா செய்ய சித்த மருத்துவ துறையில் அனுமதி பெறவில்லை எனவும் பரிசோதனை முடிவு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...