கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது கருஞ்சிறுத்தையின்( black panther) புகைப்படம்.

இந்த படம் கர்நாடகாவில் உள்ள கபினி வனப்பகுதியில் ஷாஸ் ஜங்க் என்பவரால் புகைப்படம் எடுக்கப்பட்டது. தற்போது earth என்கிற அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் இப்படம் வெளியாகி இருக்கிறது.
இதனை கண்ட நெட்டிசன்கள் ஜங்கிள் புக்கில் வரும் பகீரா கதாபாத்திரம் என்று பகிர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த வருடம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படக்காரர் பகிர்ந்த இந்த படம் தற்போது பலரது பாராட்டை பெற்று வருகிறது.
இந்த கருஞ்சிறுத்தை மேற்கு தொடர்ச்சி மலைகளில் அரிதின் அரிதாக காணப்படும் அழிந்து வரும் பட்டியலில் உள்ள உயிரினமாகும். பார்ப்பதற்கு கிராஃபிக்ஸ் போன்று தெரிந்தாலும் இது உண்மையில் வனப்பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்
இவ்வுயிரினத்தை படம் எடுப்பதே இன்றைய புகைப்படக்காரர்களின் கனவாக உள்ளது.