கோவை சூலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகைகள் கொள்ளை..! போலீசார் விசாரணை

கோவை: கோவை சூலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கோவை சூலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சூலூர் ரங்கநாதபுரம் நெய்தல் நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜூ (57). சூலூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 4ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கலங்கலில் உள்ள தனது மைத்துனர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் வீடு திரும்பியபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த தங்க நெக்லஸ், செயின், மோதிரம், கம்மல் என 12 பவுன் நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, சூலூர் காவல் நிலையத்தில் ராஜூ அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். திருடு போன பகுதியில் சி.சி.டி.வி கேமரா எதுவும் இல்லாத காரணமாக மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

மேலும், கைரேகை நிபுணர் கதவு மற்றும் பீரோவில் உள்ள கைரேகைகள் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குடியிருப்பு பகுதியில் திருடு போன சம்பவம் அங்கு வசிப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...