கோவை: பொள்ளாச்சியில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த நாளை முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வணிக நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என சார் -ஆட்சியர் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கடந்த இரண்டு வாரங்களாக பொள்ளாச்சியில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த நாளை முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வணிக நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என சார் -ஆட்சியர் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம், பொள்ளாச்சி கடைவீதியில் செயல்படும் மருந்து கடை உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடைவீதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது.
மேலும், அங்கு செயல்பட்ட துணி மற்றும் நகைக்கடைகள் அனைத்தும் 15 நாட்களுக்கு அடைக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், அதே பகுதியில் செயல்பட்ட துணி கடை மேலாளரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார்.
இதனையடுத்து, சார்-ஆட்சியர் தலைமையில் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர், தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள், மருத்துவர்கள், உணவக உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், பேசிய சார்- ஆட்சியர், கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அனைவரும் முக கவசம் அணிய வலியுறுத்துவது என்றும் நகரம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கவும், வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திறக்க வேண்டும் என்றும் உணவகங்கள் 8 மணி வரை திறந்து பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், மாலை 5 மணிக்கு மேல் கடைகள் திறந்து இருந்தால் அபராதம் விதிப்பதுடன் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
அதேபோல, இதற்கு பொதுமக்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.