கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் தப்பி ஓட்டம்..!

கோவை: கொரோனா தொற்று காரணமாக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் மருத்துவமனையில் இருந்து நேற்று தப்பி ஓடிய நிலையில் தகவலறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் மீண்டும் அனுமதித்தனர்.


கோவை: கொரோனா தொற்று காரணமாக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் மருத்துவமனையில் இருந்து நேற்று தப்பி ஓடிய நிலையில் தகவலறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் மீண்டும் அனுமதித்தனர்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறையின் அறிவுரையின்படி, கோவை உட்பட நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப்படி அனுமதிக்கப்பட்டவர்கள் சில நேரங்களில் மருத்துவமனையிலிருந்து தப்பி வெளியேறுவது வாடிக்கையாகி வருகிறது.

அதே போல, கோவை அரசு மருத்துவமனையில் திருப்பூர் குண்டடம் பகுதியைச் சேர்ந்த நபர் சிறுநீரக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதியானது. 

இதையடுத்து, அவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இப்படி இருக்க இன்று காலை அந்த நபர் இஎஸ்ஐ மருத்துவமனையிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியே வந்துள்ளார். 

தொடர்ந்து, அவரது மகனுக்கு போன் மூலம் நான் மருத்துவமனையிலிருந்து வெளியே விட்டதாக தெரிவித்த அவர், தன்னை வந்து அழைத்துச் செல்லும்படி தெரிவித்துள்ளார். 

அவர் தந்தை அச்சத்தினால் இப்படி ஒரு தவறான செயலை செய்து விட்டார் என்பதை புரிந்து கொண்டு, அவர் மகன் உடனடியாக ஆத்மா அறக்கட்டளைக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

பின்னர், சிங்காநல்லூர் போலீசார் துணையுடன் வந்த அறக்கட்டளையினர் அவருடைய அடையாள புகைப்படத்தை கொண்டு பேருந்து நிலையத்திலிருந்து அவரை மீட்க 108 ஆம்புலன்சை வரவழைத்தனர்.



இதைத்தொடர்ந்து அவர் மீட்கப்பட்டு மீண்டும் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கோவை மற்றும் நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் அடிக்கடி மருத்துவமனையில் இருந்து வெளியேறுவது மருத்துவமனையின் பாதுகாப்பு குறைபாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது, என ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...