வால்பாறையில் நோய் தடுப்பு சோதனைச்சாவடி திறப்பு! பயணிகள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம் - நகராட்சி ஆணையர்

கோவை: வால்பாறையில் கொரோனா தடுப்பு சோதனைச்சாவடியை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.

கோவை: வால்பாறையில் கொரோனா தடுப்பு சோதனைச்சாவடியை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதி கொரோனா தொற்று இல்லாத பகுதியாக தொடர்ந்து வரும் நிலையில், கொரோனா பாதிப்புள்ள

பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்கும் விதமாக வால்பாறையை அடுத்த அட்டகட்டியில் சோதனைச்சாவடி அமைக்க முடிவெடுத்து பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் நேற்று, ஜூலை 7 ஆம் தேதி, ரூ 3 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சோதனைச்சாவடி மையத்தை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.



மேலும், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையாளர் பவன்ராஜ்:

பொள்ளாச்சி உட்பட கீழ் பகுதியில் இருந்து வருபவர்கள், வால்பாறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேவையிருப்பின் கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் அவசியம் பெற்று மட்டுமே வர அனுமதிக்கப்படுவர்.

அதேபோல, வால்பாறையிலிருந்து கீழ் பகுதிக்கு செல்பவர்களும் திரும்பி வரும் போது கொரோனா சான்றிதழ் கட்டாயம் பெற்றிக்க வேண்டும் என்றார்.

மேலும், ரொட்டிக்கடை புதிய பேருந்து நிலையம் பகுதியிலும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம்

கட்டுப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில் வால்பாறை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு, பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், வால்பாறை நகராட்சி ஆணையர் பவன்ராஜ், வட்டாட்சியர் ராஜா, பொறியாளர் சரவணபாபு காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, தொழிற்சங்கத் தலைவர் வீ அமீது, வாசு, நகர செயலாளர் மயில்கனேசன், வருவாய்த்துறையினர், மருத்துவத்துறையினர், நகராட்சி மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...