திருப்பூர்: திருப்பூரில் கொரோனா வைரஸிற்கு குணமடைந்து நேற்று ஜூலை 7 ஆம் தேதி, 12 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும், புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகி பாதிப்பின் எண்ணிக்கை 237 ஆக உள்ளது என மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூரில் கொரோனா வைரஸிற்கு குணமடைந்து நேற்று ஜூலை 7 ஆம் தேதி, 12 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும், புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகி பாதிப்பின் எண்ணிக்கை 237 ஆக உள்ளது என மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தினமும் 10 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் 17 பேருக்கு தொற்று உறுதியாகியிருப்பது மக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் புதிதாக 124 பேர் என மொத்தம் 3286 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இதோடு 306 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை நிறைவு செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும், 813 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள்:
1. திருப்பூர் டிவி நகர் காலேஜ் சாலையில் 58 வயதான பெண்
2. பெருமாநல்லூர் தட்டான் குட்டையை சேர்ந்த 30 வயதான ஆண்.
3. திருப்பூர் அண்ணாத்துரை காமொண்டில் 23 வயதான பெண்.
4. திருப்பூர் சந்திராபுரத்தல் 25 வயதான பெண்.
5. திருப்பூர் வில்லியங்காடு ஈஸ்வர மூர்த்தி நகரை சேர்ந்த 55 வயதுடைய ஆண்.
6 திருப்பூர் குன்னத்தூரில் 65 வயதான ஆண்.
7. அத்தியூரில் 63 வயதான ஆண்.
8. பல்லகௌண்டன்பாளையத்தில் 28 வயதான பெண்.
9. திருப்பூர் சுப்ரமணியநகரில் 29 வயதுடைய பெண்.
10. திருப்பூர் அருணா நகரை சேர்ந்த்33 வயதான ஆண்.
11. திருப்பூர் குண்டடத்தை சேர்ந்த 67 வயதான ஆண்.
12. கே. செட்டிப்பாளையம் என்ஒசி நகரை சேர்ந்த 38 வயதான ஆண்.
13. சொக்கனா காலேஜ் ரோட்டில் 36 வயதான ஆண்.
14. திருப்பூர் சிடிசி எதிரில் 28 வயதான ஆண்.
15. திருப்பூர் செந்தில் நகரில் 31 வயதான பெண்.
16. நல்லத்துப்பாளையத்தில்21 வயதுடைய ஆண்.
17. ராஜூவ் நகர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த 53 வயதான ஆண்.
18. திருப்பூர் அழகுமலையை சேர்ந்த 58 வயதான ஆண் உள்பட 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.