தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.10 ஆயிரம் கடனை பெற வழிகாட்டுதல் இல்லாததால் சாலையோர வியாபாரிகள் அவதி

கோவை: கொரோனா கால சிறப்பு கடனாக தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.10 ஆயிரம் கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல் இல்லாததால் சாலையோர வியாபாரிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை: கொரோனா கால சிறப்பு கடனாக தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.10 ஆயிரம் கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல் இல்லாததால் சாலையோர வியாபாரிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 6 ஆயரத்திற்கும் மேற்பட்ட பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகளும், பதிவு பெறாமல் சுமார் 12 ஆயிரம் சாலையோர வியாபாரிகளும் உள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக சாலையோரம் மற்றும் நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு கடன் வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

சாலையோர வியாபாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு கடனை எவ்வாறு பெறுவது? யாரை தொடர்பு கொள்வது? எங்கு விண்ணப்பங்கள் கிடைக்கும் ? என எவ்வித வழிகாட்டுதல் இல்லாமல் உள்ளோம், என தெரிவித்தனர் வியாபாரிகள்.

இது குறித்து, கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் மணி, கூறுகையில்:

கோவை மாநகர் முழுவதும் சாலையோர வியாபாரிகள் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வாழ்வா, சாவா என்கிற நிலையில் உள்ளனர்.

இதனிடையே அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கடனை வங்கிகளிடம் சென்று கேட்டால் அலட்சியம் செய்கிறார்கள். இது குறித்து அறிவிப்புகள் வரவில்லை என்கின்றனர்.

இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகமிடம் மனு அளித்துள்ளோம். ஆனாலும் இது பற்றிய விவரங்கள் இன்னமும் தெரியவில்லை. கடனை பெற வழிகாட்டுதல் இல்லாததால், இந்த சலுகையை பெற முடியாமல் சாலையோர வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.

உடனடியாக அரசு சார்பாக ஒரு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க எளிய வழிமுறையை கையாள வேண்டும், என்றார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...