கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மொத்த காய்கனி மார்க்கெட் 11 நாட்களுக்கு பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மொத்த காய்கனி மார்க்கெட்டை சேர்ந்த 3 வியாபாரிகளுக்கும், அண்ணா மார்க்கெட்டை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக எம்.ஜி.ஆர் மார்க்கெட் மூடப்பட்டது.
மேலும், அங்குள்ள வியாபாரிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா நெகட்டிவ் வரும் வியாபாரிகளுக்கு வியாபாரம் நடத்த எருக்கம்பெனி மற்றும் ஜி.சி.டி கல்லூரி வளாகத்தில் தற்காலிக மார்க்கெட் அமைத்து தரப்பட்டது.
இந்நிலையில், கோவை மாநகராட்சி ஆணையரின் அறிவுறுத்தலின்படி எம்ஜிஆர் மொத்த காய்கனி மார்க்கெட் இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
இது தொடர்பாக எம்.ஜி.ஆர் மார்கெட் தலைவர் அக்பர் ஹல்தாஃப் மற்றும் செயலாளர் சுப்பிரமணி கூறுகையில், மாநகராட்சி தரப்பில் வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வியாபாரம் நடப்பதாக தெரிவித்தனர்.
மேலும், வழக்கமான நாளில் 100க்கும் மேற்பட்ட லாரிகள் மாலை 4.30 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை சந்தைக்கு காய் மற்றும் கனிகள் இறக்க வருகிறது. அவை மீண்டும் வேன்கள் மற்றும் லாரிகளில் ஏற்றப்படுகின்றன பல இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்த மொத்த சந்தையில் இருந்து தமிழ்நாட்டின் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்த அவர்கள், கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் இந்த சந்தையை சார்ந்துள்ளதாக தெரிவித்தனர்.