கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கொரோனோ தொற்று காரணமாக நீதிமன்ற சேவைகள் நான்கு நாட்கள் செயல்படாது, அதிகாரபூர்வ அறிவிப்பு

கோவை: கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து சூலூர் விரைவு நீதிமன்றம் மற்றும் NO:2 விரைவு நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து சூலூர் விரைவு நீதிமன்றம் மற்றும் NO:2 விரைவு நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், இன்று நீதிபதி மூன்று பேர் உட்பட ஊழியர் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை

மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றதில் ஒருவருக்கு கொரோனோ தொற்று

உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, தொற்று உறுதி செய்யப்பட்டவர், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து, கோவை நீதிமன்ற (No:2) நீதியரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூலூர் நீதிமன்றம் மற்றும் விரைவு நீதி மன்றம் (No:2) இன்று, ஜூலை 7 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை செயல்படாது என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஐந்து நாட்கள் வழக்கறிஞர்கள் மிக முக்கியமான வழக்குகளை மட்டும், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து, கோவை மற்றும் சூலூர் நீதிமன்ற வளாகங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை சுகாதாரத்துறை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனிடையே, கோவை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 900 யத்தை தாண்டியுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...