கோவை: கோவையில் மது அருந்த பணம் இல்லாத காரணத்தினால் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து திருட முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவையில் மது அருந்த பணம் இல்லாத காரணத்தினால் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து திருட முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் ஆர்.எஸ் புரம், டி.பி. ரோட்டில் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 4ம் தேதி ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி நடந்ததாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றது.
இதனையடுத்து, அங்கு சென்ற ஆர் எஸ் புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு பதிவு செய்தனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அதே பகுதியைச் சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் விஜயகுமார்(48) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, விஜயகுமாரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் மது அருந்த பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து திருட முயன்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.