கோவை கொடிசியா கொரோனா சிறப்பு வார்டு இன்று முதல் செயல்பட துவக்கம்; 118 அறிகுறியற்ற கோவிட் 19' நோயாளிகள் அனுமதி!

கோவை: கோவை கொடிசியா சிறப்பு வார்டில் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 118 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கோவை: கோவை கொடிசியா சிறப்பு வார்டில் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 118 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் முறையாக தனிமைப்படுத்தி கொள்ளாததால், கடந்த சில வாரங்களாக கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தனியார் தங்க நகை பட்டறை ஊழியர்கள் உட்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, என மாநில சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. 

இதனால், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்காப்ட்டவர்கள் எண்ணிக்கை 802 ஆக உயர்ந்த உள்ளது, என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், கொரோனா பரவல் அதிகம் உள்ள செல்வபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான -- சலீவன் வீதி, உப்பாரவீதி, தாமஸ் வீதி, சுக்ரவார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்க நகை பட்டறைகள் மறு உத்தரவு வரும் வரை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டது. 

இதனிடையே, கொடிசியா வணிக வளாகத்தில் அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 400 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட ஆலோசித்து வந்த நிலையில், இன்று முதற்கட்டமாக 300 படுக்கையில் அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 26 பேர் உட்பட அறிகுறியற்ற 118 கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் இதுவரை 63,000 மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், 7000 க்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர். வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து கோவைக்கு வந்த 212 பேர் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 

மொத்தமாக மாவட்ட முழுவதும் 8000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும், 315 அறிகுறியற்ற நபர்கள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உள்ள பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 

இந்நிலையில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்த 54 வயது பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

இதனையடுத்து, கோவையில் கொரோனா உயிரிழப்பு 7 ஆக உயர்ந்துள்ளது. 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...