கொரோனா நிவாரண நிதியாக ரூ.9 கோடி வழங்கிய ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌!

கோவை: கொரோனாவால்‌ வாழ்வாதாரம்‌ இழந்து தவிக்கும்‌ ஆயிரக்கணக்கான மக்களின்‌ பசியை போக்குவதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு ரூ.9 கோடி வழங்கியுள்ளார்‌.


கோவை: கொரோனாவால்‌ வாழ்வாதாரம்‌ இழந்து தவிக்கும்‌ ஆயிரக்கணக்கான மக்களின்‌ பசியை போக்குவதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு ரூ.9 கோடி வழங்கியுள்ளார்‌.

ஈஷாவின்‌ சமூக நலப்‌ பிரிவான ஈஷா அவுட்ரீச்‌' அமைப்பானது கோவை தொண்டாமுத்தூர்‌ சுற்றுவட்டார இராமங்களில்‌ ஏப்ரல்‌ 1-ம்‌ தேதி முதல்‌ கொரோனா நிவாரணப்‌ பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தனமும்‌ ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்து வருகிறது.

மேலும்‌, கொரோனா தடுப்பு பணியில்‌ ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்‌, சுகாதாரப்‌ பணியாளர்கள்‌, காவல்துறையினர்‌, தூய்மை பணியாளர்கள்‌ உட்பட பல்வேறு பிரிவினருக்கு தேவையான உதவிகளையும்‌ செய்து வருகிறது. இப்பணிகள்‌ அனைத்தும்‌ கோடிக்கணக்கான பொருள்‌ செலவில்‌ நடைபெறுகின்றன. எனவே, இதற்கு நிதி திரட்டும் விதமாக சத்குரு அவர்கள்‌ 2 ஓவியங்களை வரைந்தார்‌. அவருடைய முதல்‌ ஓவியம்‌ ரூ.4.14 கோடிக்கு ஏலம் போனது.



இதையடுத்து, ஈஷாவின்‌ பிரசித்தி பெற்ற காளையான 'பைரவா' வின்‌ நினைவாக சத்குரு வரைந்த ஓவியம்‌ கடந்த மாதம்‌ ஆன்லைன்‌ வழியாக ஏலம் விடப்பட்டது. ஏலத்தின்‌ கடைசி நாளான நேற்று முன்தினம்‌ (ஜூலை 5) அந்த ஓவியம்‌ ரூ.5.1 கோடிக்கு ஏலம்‌ எடுக்கப்பட்டது. இந்த 2 ஓவியங்கள்‌ மூலம்‌ கிடைத்த ரூ.9.2 கோடி நிதியை சத்குரு 'ஈஷா அவுட்ரீச்‌' இன்‌ நிவாரணப் பணிகளுக்கு தனது பங்களிப்பாக வழங்கினார்‌.

2-வது ஓவியமானது முழுக்க முழுக்க இயற்கையான பொருட்களை கொண்டு சத்குரு வரைந்துள்ளார்‌. நாட்டு மாட்டு சாணம்‌, கரி, மஞ்சள்‌, சுண்ணாம்பு ஆகியவற்றை மட்டும்‌ பயன்படுத்தி அவர்‌ அந்த ஓவியத்தை வரைந்துள்ளார்‌.

இந்தியாவில்‌ கொரோனா பாதிப்பு ஆரம்ப கட்டத்தை எட்டிய போதே, 'உங்களை சுற்றியிருக்கும்‌ ஒருவர்‌ கூட பசியால்‌ உயிரிழக்காமல்‌ பார்த்து கொள்ளுங்கள்‌' என்று ஈஷா தன்னார்வலர்களுக்கு சத்குரு வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...