தலைமை பெண் காவலருக்கு கொரோனா தொற்று..! கோவை போத்தனூர் காவல் நிலையம் 2வது முறையாக மூடல்!

கோவை: கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது முறையாக காவல் நிலையம் மூடப்பட்டு அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயல்பட உள்ளது.


கோவை: கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது முறையாக காவல் நிலையம் மூடப்பட்டு அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயல்பட உள்ளது.

கடந்த ஏப்ரல் 24ம் தேதி போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய மூன்று காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட்டு அருகில் மாற்றபட்டது.

பின்னர் 18 நாட்களுக்கு பின் மூடப்பட்ட போத்தனூர் காவல் நிலையம் திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பணிபுரியும் போலீசார் முகக்கவசங்கள் அணிந்து பணியாற்றி வருகின்றனர். புகார் அளிக்க வரும் நபர்களும் முகக்கவசம் அணிந்து வரவும் அறிவுறுத்தப்பட்டுக் காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. 

இந்த நிலையில், அங்கு பணியாற்றும் பெண் தலைமை காவலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து இரண்டாவது முறையாக காவல் நிலையம் மூடப்பட்டு அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயல்பட உள்ளது.

மேலும், அங்கு பணிபுரியும் காவலர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை செய்ய அறுவுறுத்தபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல, வீரகேரளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை விற்பனை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த டாஸ்மாக் கடை (1633) பூட்டப்பட்டது.

இதனிடையே, டாஸ்மாக் கடை விற்பனை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அந்த கடையில் மது வாங்கிய மதுப்பிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...