கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்து நிகழும் யானையின் மரணங்கள்..! கொந்தளிக்கும் வன ஆர்வலர்கள்!

கோவை: கோவை மாவட்டம் தொழில் நகரம் மட்டுமில்லை, மேற்கு தொடர்ச்சி மலையை கொண்ட இயற்கை நகரத்தில் கடந்த சில நாட்களாக யானைகளின் இறப்பு வன உயிர் ஆர்வலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் தொழில் நகரம் மட்டுமில்லை, மேற்கு தொடர்ச்சி மலையை கொண்ட இயற்கை நகரத்தில் கடந்த சில நாட்களாக யானைகளின் இறப்பு வன உயிர் ஆர்வலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 6 மாதமாக 14 யானைகள் உயிரிழந்து இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அவற்றின் இறப்பிற்கான காரணங்கள் இதுவரை சரியாக நிரூபிக்கப்படவில்லை என்பதே வன ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. 



இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம் அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறுகையில், மூன்று மாதத்தில் 13 யானைகள் இறந்து இருப்பது தான் உண்மையான செய்தி என்று கூறினார். மேலும் யானைகளின் வலசைப்பாதைகளையும் கடந்து அதனுடைய core zone வரை விவசாயம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அந்த இடத்தில் யானைகள் வரக்கூடாது என்பது இல்லாமல் எந்த ஒரு வனவிலங்கும் வரக்கூடாது என்பதற்காக அனைத்து தீங்கினையும் செய்கிறார்கள். 

அதேபோல, யானைகளின் மரணங்கள் பற்றிய தகவல்களை மக்களுக்கு சொல்லவேண்டிய கடமை வனத்துறையிடம் மட்டுமே உள்ளது. ஆனால், வனத்துறையோ காடுகளுக்குள் என்ன நடப்பது மக்களுக்கு தெரியவேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள்.

ஒரு காட்டில் யானை இறந்தால் ஓரிரு நாட்களில் வனத்துறைக்கு தெரிந்துவிடும். அதையடுத்து தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து என்ன பிரச்சனை என்று அலசி ஆராய்ந்து சொல்லுவார்கள். இது தான் இப்போது உள்ள நடைமுறை. ஆனால் காட்டு உயிர்கள் எதுவாக இருந்தாலும் "இயற்கைக்கு மாறாக நேரும் மரணங்கள் சந்தேகிக்கவேண்டும்". உடற்கூறாய்வு பரிசோதனை அவசியம் செய்து மக்களிடம் கூற வேண்டும். காடும் காட்டு உயிரிகளும் சுருங்கி கிடக்கின்றது. பெரும்பாலும் மலையோரம் உள்ள எஸ்டேட்களில் நூற்றுக்கணக்கான ஹெக்டேர்களை பிடித்து வைத்து தேயிலை மற்றும் பணப்பயிர்களை பயிரிடும் பெரும் முதலாளிகள் கூலி ஆட்களை கொண்டு வனவிலங்குகளுக்கு விஷம் வைக்கும் சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.

இந்த கூலி ஆட்கள் வேறு யாரும் இல்லை பழங்குடி மக்கள், கிழ்த்தட்ட மக்கள் தான் எந்த பிரச்சினை வந்தாலும் இவர்களை கை காட்டி விட்டு பெரும் முதலாளிகள் தப்பித்துவிடுவார்கள். காட்டின் பிரச்சனை என்பது சமவெளியில் வாழும் மக்களின் பிரச்சனையாக பார்க்க வேண்டும். மேலும் மேற்குத்தொடர்ச்சி மலையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு திட்டங்களுக்காக காட்டுயுரிகளை அழிக்கிறதா என்று கேள்வியும் வருகிறது. கிட்டத்தட்ட மூன்று மாவட்டங்களின் நீர் ஆதாரமாக செயல்படும் மேற்கு தொடர்ச்சி மலையில் செத்து கொண்டிருப்பது யானை என்றில்லாமல் காடு என்று நினைவில் கொண்டு காட்டுயுரிகளை பாதுகாக்க வேண்டும். மேலும் யானைகளின் மரணம் தொடர்பான ஆதாரங்கள் நியமிக்கப்பட்ட தனிக்குழு ஆராய்ந்து சரியான தகவல்களை வெளியிட வேண்டும் என்கிறார்.

அதேபோல, யானைகளை பற்றி தெரிந்து கொள்ள வன ஆர்வலர் இராமமூர்த்தி அவர்களிடம் பேசினோம். இது குறித்து அவர் கூறுகையில், யானைகள் அதிகளவில் உயிரிழந்த மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரகத்தை பொறுத்தவரை ஆற்றை ஒட்டி காணப்படும் விவசாய பூமி பகுதிகள் தான் அதிகம். விவசாய பூமிக்கும் வனப்பகுதிக்கும் இடையில் இடைவெளி இல்லாமல் இருப்பதும் பணப்பயிர்களை தவிர்த்து பாரம்பரிய பயிர்களை பயிரிடுவதும், இராசயன பொருட்களை பயன்படுத்துவது தான் யானைகள் இறப்பிற்கு காரணம் ஆகும். மலையோரம் மற்றும் காடுகளின் ஓரத்தில் இருக்கும் விவசாய நிலங்கள் பெரும்பாலும் பெரும் முதலாளிகளுடையதாக இருக்கிறது. யானைகளுக்கு வலசப்பாதையில் ஏற்படும் இடர்பாடுகள், உணவுப்பற்றாகுறை, நோய்வாய்ப்படுதல் என காரணங்கள் இருக்கின்றன. 

எப்பொழுது மனிதன் பணப்பயிர்களை விதைக்க தொடங்கினானோ அப்போதே வனவிலங்குகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிட்டது. ஒரு நாளைக்கு 120 லிட்டருக்கு மேல் தண்ணீர் அருந்தி,150 கிலோவுக்கு மேல் உணவை எடுத்துக்கொண்டு 22 முதல் 35 நடந்து காட்டையும் அதன் வாழ்விடத்தையும் காத்து வருபவையாகும். அதன் வாழ்விடங்களை மறித்து செங்கல் சூளைகளாகவும், கல்வி நிறுவனங்களாகவும், ஆன்மிக கூடங்களாகவும், சொகுசு ரிசர்ட்டுகளாகவும் அமைத்து வைத்து இருக்கிறார்கள்.

உரிய ஆவணம் இல்லாமல் துப்பாக்கி வைத்து இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். விவசாயிகளுக்கு எதற்கு துப்பாக்கிகள் என்ற கேள்வியையும் வன ஆர்வலர்கள் முன் வைக்கின்றனர்.

அடுத்தடுத்து நிகழும் யானைகளின் மரணங்களை பற்றி விசாரணை செய்ய தனிக்குழு ஒன்றை அமைத்து இருக்கிறார்கள். இதன் மூலம் காடுகளுக்குள் நிகழும் சம்பவங்கள் அனைத்தும் மக்களும் அறிய வாய்ப்புண்டு..!

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...