பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்யாவிட்டால் பிரண்ட்ஸ் ஆப் பீப்பிள் என்பதை ஆரம்பித்து செயல்படுவோம் - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

கோவை: பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினை தடை செய்யாவிட்டால் பிரண்ட்ஸ் ஆப் பீப்பிள் என்பதை ஆரம்பித்து செயல்படுவோம் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை: பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினை தடை செய்யாவிட்டால் பிரண்ட்ஸ் ஆப் பீப்பிள் என்பதை ஆரம்பித்து செயல்படுவோம் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் கனகராஜ் திராவிடர் தமிழர் கட்சியினருடன் வந்திருந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் காவல்துறையினரின் பெயர்களை பல இடங்களில் தவறான முறைகளில் கூறி பல்வேறு அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து செய்தி வெளியாகி வரும் நிலையில் சமீபத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய நிகழ்வில் சம்பந்தப்பட்ட போலீஸ் நண்பர்கள் குழுவில் சேவாபாரதி எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர்.

சேவாபாரதி அமைப்பானது ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு அங்கமாக தன்னை பதிவு செய்து கொண்டுள்ள அமைப்பு எனவும் அனைத்து சமூகத்தினரும், அனைத்து மதத்தினரும் பாரபட்சமின்றி சேவை புரிய வேண்டிய காவல் துறையில் மத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பது சட்டத்திற்கு புறம்பானது என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.



அதேபோல, அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உள்ள மதசார்பின்மை கோட்பாட்டிற்கு எதிரானது இது எனவும் மதம் சார்ந்த அமைப்புகளை சேர்ந்த நபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், காவல்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினை தடை செய்யாவிட்டால் பிரண்ட்ஸ் ஆப் பீப்பிள் என்பதை ஆரம்பித்து செயல்படுவோம் என்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...