கோவையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

கோவை: கோவையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி ரூ. 25,000 நிதி உதவி வழங்கினார்.

கோவை: கோவையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி ரூ. 25,000 நிதி உதவி வழங்கினார். 

கோவை வீரகேரளம் பகுதியைச் சேர்ந்தவர் பெண் ஜோதிமணி(36). இவரது தந்தை 20 வருடங்களுக்கு முன் காலமாகி விட்டார். தனது சகோதரர் மற்றும் சகோதரி திருமணமாகி சென்றுவிட்ட நிலையில் தனது வயதான தாய் ராஜம்மாள் (80) உடன் மாதம்பட்டியில் வசித்து வருகிறார். 

பிறவியிலேயே இவருக்கு ஒரு சிறு நீரகம் மட்டுமே இருந்துள்ளது. கடந்த 3 வருடத்திற்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு சென்ற போது ஒரு சிறுநீரகம் மட்டுமே இருப்பதும் அதுவும் இடம் மாறி இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து, அவர் மருந்துகள் உட்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ஜோதிமணி குறித்த செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையறிந்த மாவட்ட ஆட்சியர், மருத்துவ உதவியாக 25,000 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

பின்னர் பேசிய ஜோதிமணி, வீட்டு வாடகை ரூ.800 மற்றும் மாதம் மருந்திற்கு ரூ.6000 செலவுகள் ஆவதாகவும் சிரமத்துடன் இளநீர் விற்று வாழ்க்கை நடத்தி வருவதாக தெரிவித்த அவர், ஒரு முறை 150 இளநீர் எடுத்தால் 3 நாட்களில் விற்பனை செய்து மீண்டும் காய்கள் வாங்கி விற்பனை செய்வதாக தெரிவித்தார்.

மேலும், இளநீர் சப்ளை செய்யும் நபர், மற்றவர்களுக்கு கொடுக்கும் விலையை விட தனக்கு குறைவாக வழங்குவதுடன் பணமும் கொடுத்து உதவி வருவதாக கூறினார். தற்போது மாவட்ட ஆட்சியர் தனக்கு வழங்கி உள்ள இந்த நிதி நான்கைந்து மாதங்களுக்கு மருத்துவ செலவிற்கு உதவிகரமாக இருக்கும் எனவும் இதற்கு மாவட்ட ஆட்சியருக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...