முழு ஊரடங்கினால் வெறிச்சோடி காணப்பட்ட கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட சாலைகள்..!

திருப்பூர்: தமிழகம் முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வரும் தளர்வற்ற முழு ஊரடங்கின் காரணமாக, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வாகனபோக்குவரத்து இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.


திருப்பூர்: தமிழகம் முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வரும் தளர்வற்ற முழு ஊரடங்கின் காரணமாக, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில்  வாகனபோக்குவரத்து இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 198 பேருக்கும், கோவையில் 696 பேருக்கும், நீலகிரி மாவட்டத்தில் 121 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் 70 க்கும் மேற்பட்டோர்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3700 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர், என மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நோய் பரவல் தீவிரத்தை தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவந்தாலும் தமிழக அரசு, இந்த ஜீலை மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வற்ற முழு ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது. 

இதன் காரணமாக இன்று கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடைகளும் இன்று அடைக்கப்பட்டுள்ளன. மேலும்,  முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகள் வாகன போக்குவரத்தின்மையால் வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பாக, பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலும்  பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும், தேவையின்றி வீட்டினை விட்டு வெளியே வரும் மக்களை கண்காணிக்கும் விதமாக  ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...