கோவை: கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த அம்மன் அர்ச்சுணன் இருந்து வருகிறார். இவரது வீடு செல்வபுரம் அருகேயுள்ள திருநகர் பகுதியில் உள்ளது. இவரது மகள் குடும்பத்தினர் மதுரைக்கு சென்று திரும்பியுள்ளனர். இதையடுத்து வீட்டில் உள்ள 9 பேருக்கு கடந்த 29 ம் தேதி மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணனின் 32 வயது மகள், 39 வயது மருமகன், 11 வயது பேத்தி ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து மூவரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.