கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர், வைத்தியநாதன் கடந்த ஆண்டு வால்பாறையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும், வால்பாறையில் பருவமழையின் பொது வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் வாழைத்தோட்டம், ஸ்டான்மோர், ஆத்துமட்டம் போன்ற பகுதிகளை நேரில் பார்வையிட்ட சார் ஆட்சியர், இந்த ஆண்டு முன்னெச்சரிக்கையாக வாழைத்தோட்டம் ஆறு தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
வெள்ளம் பாதிப்பு ஏற்படும் சமயத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கான வால்பாறை கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமை பார்வையிட்டார்.
தொடர்ந்து, வால்பாறை நகரில் ஹோட்டல்கள், பேக்கரிகள் ஆகிய மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டு உள்ளதா என்றும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பதை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பருவ மழையை எதிர்கொள்ள, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க, மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என, வருவாய்த் துறை அமைச்சர், உதயகுமார் சமீபத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வின் போது வால்பாறை வட்டாட்சியர் ராஜன், வால்பாறை நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.