கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மயிலின் உடலுக்கு போலீசார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்திய சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
கோவை: கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் போலீசார் கண்டைன்மெண்ட் ஜோன் மானிடரிங் ஸ்குவாட் (containment zone monitoring squad) வாகனம் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் மூலம், தொடர்ந்து ஒலிபெருக்கி கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது வீரியம் அடைந்து வரும் நிலையில், அதன் பரவல் தன்மையை தடுக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண், துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் உத்தரவின் பேரில் கோவை மாநகரம் முழுவதும் காவல் உட்கோட்ட வாரியாக பிரித்து கண்டைன்மெண்ட் ஜோன் ஸ்பெஷல் ஸ்குவாட் அமைத்து நோய்த்தடுப்பு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, தற்போது செல்வபுரம் காவல் எல்லைக்குட்பட்ட செட்டி வீதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில், அதிநவீன ட்ரோன் கேமரா மூலமும் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளை இன்று மாநகர காவல் ஆணையாளர் துவங்கி வைத்துள்ளார்.