கோவை முத்தண்ணன் குளத்தில் இடிக்கப்பட்ட வீடுகளின் கட்டிட கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்!

கோவை: கோவை: கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் கட்டிட கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோவை: கோவை: கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் கட்டிட கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முத்தண்னன் குளத்தில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.

இதனால் அக்குளக்கரையில் வசிக்கும் மக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், காபி கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளன. அங்கு காலியாக இருந்த 1300க்கும் மேற்பட்ட வீடுகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் இடிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது உயர்நீதிமன்ற உத்தரவால் அப்பகுதியில் வீடுகள் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இடிக்கப்பட்ட வீடுகளின் கட்டிட கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், இப்பகுதியில் கட்டிட கழிவுகள் லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. விரைவில் கட்டிட கழிவுகள் அகற்றப்படும், என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...