அதிமுக வெற்றிக்கு உழைத்த எனக்கு அதிமுக தலைமை இன்னோவா கார் வாங்கி கொடுக்க வேண்டும் - பி.எஸ்.பாண்டியன்

கோவை: அதிமுக வெற்றிக்கு உழைத்த தனக்கு அதிமுக தலைமை இன்னோவா கார் வாங்கி கொடுக்க வேண்டும் பி.எச். பாண்டியனின் சகோதரர் பி.எஸ். பாண்டியன் தெரிவித்தார்.

கோவை: அதிமுக வெற்றிக்கு உழைத்த தனக்கு அதிமுக தலைமை இன்னோவா கார் வாங்கி கொடுக்க வேண்டும் பி.எச். பாண்டியனின் சகோதரர் பி.எஸ். பாண்டியன் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் சகோதரர் பி.எஸ்.பாண்டியன் கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அதிமுகவின் மூத்த நிர்வாகியாக இருந்தவன் நான் என தெரிவித்த அவர், சாத்தான்குளம் விவகாரத்தினை ஐ.ஜி.சங்கர் திறமையாக கையாள்வதாக தெரிவித்தார்.

அதே வேளையில் தென்மண்டல ஐ.ஜியாக இருந்த சண்முக ராஜேஸ்வரன் பணி சரியில்லை எனவும் அவர் மீது ஏற்கனவே பல புகார்கள் தெரிவித்து இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தார். தலை சரியாக இருந்தால்தான் வால் சரியாக இருக்கும் என கூறிய அவர், ஆரம்பத்திலேயே சண்முக ராஜேஸ்வரனை மாற்றி இருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்காது என்றார்.

ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் மீது ஏற்கனவே புகார் கொடுத்திருந்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை எனவும் ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் தயவினால்தான் சாத்தான்குளம் சம்பவம் நடந்துள்ளது என தெரிவித்த அவர், தற்போதைய ஐ.ஜி.சங்கர் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார். ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், தான் இப்போதும் அதிமுகதான் என தெரிவித்தவர், தன்னை கட்சியை விட்டு நீக்கினால் உங்களுக்குத்தான் நஷ்டம் எனவும் தெரிவித்தார்.

அதேபோல, சசிகலா சிறையில் இருந்து வந்த பின்னர் அதிமுகவிற்கு கூட்டி வர போகின்றேன் என தெரிவித்த அவர், சசிகலாவை தான் எதிர்க்க வில்லை என்றார். கடந்த தேர்தல்களில் அதிமுக வெற்றிக்கு உழைத்த தனக்கு அதிமுக தலைமை இன்னோவா கார் வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...