கோவையில் தந்தை இறந்த சோகத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை! போலீசார் விசாரணை

கோவை: கோவையில் தந்தை இறந்த சோகத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் தந்தை இறந்த சோகத்தில் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கருமத்தம்பட்டி கிட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(34). இவரது தந்தை முத்துசாமி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காலமானார். இதனால் ரமேஷ் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மதியம் அவரது இளைய சகோதரர் கோபால கிருஷ்ணன் தனது நண்பர் பிரபாகரனுடன் தனது அண்ணன் வீட்டிற்கு சென்றவர், வீட்டின் கதவை தட்டி உள்ளார். வெகு நேரமாக கதவை திறக்காததால் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்தபோது ரமேஷ்குமார் சேலை கொண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

இதனையடுத்து, அவரை அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ரமேஷ்குமாரின் உடல் உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...