கோவை: கோவையில் பணம் பறிக்க முயன்றவர்களிடம் போராடிய இளைஞருக்கு கத்தி குத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கோவை: கோவையில் பணம் பறிக்க முயன்றவர்களிடம் போராடிய இளைஞருக்கு கத்தி குத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கோவை பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த அபுபக்கரின் மகன் சேக் அலாவுதீன் (18). இவர் நேற்று முன் தினம் இரவு 8 மணியளவில் தனது வீட்டின் அருகில் வசிக்கும் சிறுவனுடன் குறிச்சி குடியிருப்பு பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் பயணித்துள்ளார்.
அப்போது, இரு வாகனங்களில் வந்த நான்கு பேர் சேக் அலுவதீனிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை அபகரிக்க முயற்சி செய்துள்ளனர். இதனையடுத்து, அவர் அந்த மர்ம நபர்களுடன் போராடி உள்ளார்.
இந்நிலையில், அந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்து இருந்த கத்தியால் சேக் அலாவுதீனை தலை, கழுத்து மற்றும் இடது மார்பு பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
இதனை தொடர்ந்து, பலத்த காயம் அடைந்த சேக் அலாவுதீன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போத்தனூர் போலீசார் தப்பி ஓடிய குற்றவாளிகளை கைது செய்ய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.