கோவை: கோவையில் விவாகரத்து நிலுவையில் உள்ள நிலையில் மனைவியிடம் தகராறு செய்த கணவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: கோவையில் விவாகரத்து நிலுவையில் உள்ள நிலையில் மனைவியிடம் தகராறு செய்த கணவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை சிங்காநல்லூர் கிருஷ்ணாபுரம் மேடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன்(37). இவருக்கும் கோல்டு வின்ஸ் பகுதியைச் சேர்ந்த ஹேமபிரியா(28) என்பவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு ஆறு வயது மகன் உள்ளார். திருமணம் ஆன நாளில் இருந்தே சந்திரன் மனைவி மீது சந்தேகித்து அவரை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த ஹேமபிரியா தன் மகனுடன் பிறந்த வீட்டிற்கு வந்துள்ளார். மேலும், கடந்த 2019ம் ஆண்டு விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளார். கடந்த 8.6.2020 அன்று சந்திரனின் உறவினர்கள் குழந்தையை பார்க்க வந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.
இந்நிலையில், நேற்று அவரது வீட்டிற்கு வந்த அவரது கணவர் சந்திரன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி குழந்தையை தரும்படி வாக்குவாதம் செய்துள்ளார்.
பின்னர் இது குறித்து ஹேமபிரியா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பீளமேடு போலீசார், சந்திரனை விசாரணைக்கு பின் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.