கோவை: கோவையில் குடும்ப தகராறு காரணமாக பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வெள்ளலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் நபீஷா(34). இவரது கணவர் சாஹுல் ஹமீதிற்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், நேற்று குடிபோதையில் கணவர் வந்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொல்வதாக நபீசா தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் மனைவியை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, விரக்தி அடைந்த நபீஷா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கதிஜா என்பவர் அளித்த புகாரில் பேரில் போத்தனூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நபீஷாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.