கோவை: சிறுமுகையில் உயிரிழந்த பெண் காட்டுயானைக்கு அப்பகுதி கிராம மக்கள் மலர் அஞ்சலி செலுத்தி தங்கள் அன்பினை வெளிப்படுத்தினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரக பகுதியில் காட்டுயானை உயிரிழப்பு என்பது கடந்த ஒரு வாரகாலமாக அடுத்தடுத்து நடந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுமுகை வனச்சரக பகுதிக்குட்பட்ட லிங்காபுரம் பகுதியில் ஒரு பெண் காட்டு யானை உயிரிழந்தது.
உடல் மிகவும் மெலிந்து நோய்வாய்ப்பட்ட அந்த யானை நடக்க முடியாத நிலையில் உயிரிழந்தது. இதற்கு முன்னதாக அந்த யானை லிங்காபுரம் பகுதியில் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை உண்பதை அந்த கிராம மக்கள் பார்த்துள்ளனர்.
மேலும், அந்த யானை பொதுமக்கள் அருகிலேயே நின்று இருந்தாலும் அச்சுறுத்தாமல் நடந்து செல்லும் குணமுடையது என கூறும் கிராமத்தினர், யானையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, யாரும் விரட்டாமல் பயிர்களை உண்ணும் வரை அந்த யானையை விட்டுவந்ததாக கூறப்படுகிறது. குறைந்த அளவிலான பயிர்களை உண்ணும் அந்த யானை விரட்டும் முன்னரே நிலைமை அறிந்து அங்கு இருந்து சென்று விடுமாம்.
இந்த நிலையில், உயிரிழந்த அந்த யானைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் லிங்காபுரம் இளைஞர்கள் யானையை புதைத்த இடத்தில் மலர் தூவி தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

மேலும், ஊரின் மத்தியில் வன தேவதையே என்று குறிப்பிட்டு பேனர்கள் வைத்துள்ளதுடன் உணவு திருடத்தானே வந்தாய் எங்கள் உள்ளத்தை எவ்வாறு திருடினாய், உன்னை விரட்ட வெடி வைத்தோம் இன்று வெடி எங்கள் மனதில் தான் என உணர்ச்சி பொங்க அஞ்சலி பேனர்கள் வைத்துள்ளனர்.
யானையின் உருவப்படம் அமைந்துள்ள அந்த படத்திற்கு கிராம இளைஞர்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.