கோவையில் ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்களின் மூலம் 16 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி வேலுமணி தகவல்

கோவை: கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலக்கட்டத்தில் கோவை மாவட்டத்தில், அம்மா உணவகங்களின் மூலம் இதுவரை 16 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.



கோவை: கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலக்கட்டத்தில் கோவை மாவட்டத்தில், அம்மா உணவகங்களின் மூலம் இதுவரை 16 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கொரோனா காலக்கட்டத்தில் ஏழை எளிய மக்கள் பாதிப்படையா வகையில், அவர்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் ஏழை எளியோர்களின்‌ பசியாற்றும்‌ பணியில்‌ அம்மா உணவகங்கள்‌ மிகச்சிறந்த பங்காற்றி வருவதாக நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

மேலும் கோயம்புத்தூர்‌ இ.எஸ்‌.ஐ மருத்துவமனையில்‌ கொரோனா சிகிச்சை அளிக்கப்படும்‌ நோயாளிகளுக்கு உணவுகளும்‌, சிற்றுண்டிகளும்‌ சிறப்பான முறையில்‌ வழங்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார். இதோடு நாளுக்கு நாள்‌ அம்மா உணவகத்திற்கு வரும்‌ வாடிக்கையாளர்களின்‌ எண்ணிக்கையும்‌ கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் அனைத்து மக்களுக்கும் உணவு வழங்கிட ஏதுவாக, சமைத்து வரும்‌ உணவின்‌ அளவினை உயர்த்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌, மாநகராட்சி பகுதிகளில்‌ உள்ள 12 அம்மா உணவகங்களுக்கும்‌, நகராட்சிகளில்‌ உள்ள 3 அம்மா உணவகங்களுக்கும்‌ தலா ரூ.2இலட்சம்‌ மதிப்பில்‌ பாத்திரங்கள்‌ வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுவரை கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதியிலுள்ள 12 அம்மா உணவகங்களில்‌ 9 லட்சத்து 90 ஆயிரத்து 113 நபர்களும்‌, நகராட்சி பகுதியிலுள்ள 3 அம்மா உணவகங்களில்‌ 2 லட்சத்து 52 ஆயிரத்து 272 நபர்கள் உணவு உண்டு பயனடைந்துள்ளனர்‌.

இதோடு 3 லட்சத்து 71 ஆயிரத்து 313 நபர்களுக்கு உணவுடன்‌ முட்டைகளும்‌ வழங்கப்பட்டுள்ளது. இதற்கு உண்டான செலவினத்‌ தொகையாக ரூ.94.83 இலட்சம்‌ ரூபாயினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக கோயம்புத்தூர்‌ புறநகர்‌ மற்றும்‌ மாநகர்‌ மாவட்டக்கழகத்தின்‌ மூலம்‌ வழங்கப்பட்டு வருகின்றது. 

அதுமட்டுமல்லாமல்‌, கோயம்புத்தூர்‌ மாவட்டத்திலுள்ள இ.எஸ்‌.ஐ மருத்துவமனையில்‌ கொரோனா நோயாளிகளுக்கு எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்‌ வகையிலான உணவுகள்‌ தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து உணவுகளுமே தரமானதாகவும்‌, சுகாதாரமான முறையில்‌ தயாரிக்கப்பட்டும்‌ வழங்கப்பட்டு வருகிறது. 

மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு, காலை 6.30மணி பால்‌ அல்லது அரிசி கஞ்சி(விருப்பப்படி), காலை 8.00 மணி கபசுர குடிநீர்‌, காலை 8.30 மணிக்கு பொங்கல்‌/இட்லி/ஊத்தப்பம்‌/உப்புமா/வெங்காய ஊத்தாப்பம்‌, பூரி/ரொட்டி/இடியாப்பம்‌, ஏதேனும்‌ இரண்டு வகை), தேங்காய்‌ சட்னி, தக்காளி சட்னி, சாம்பார்‌, சுண்டல்‌ மசாலா, காலை 10 மணிக்கு வைட்டமின்‌ சி பானம்‌, வாழைப்பழம்‌, சாத்துக்குடி, காலை 10.30மணிக்கு இஞ்சி எலுமிச்சை சாறு/சத்துமாவு கஞ்சி, நண்பகல்‌ 12 மணிக்கு மிளகு ரசம்‌, மதிய உணவு 1மணரிக்கு சாப்பாடு, சாம்பார்‌, ரசம்‌, காய்கறி பொரியல்‌, அல்லது தக்காளி சாதம்‌/தேங்காய்‌ சாதம்‌,காய்கறி நெய்‌ சாப்பாடு(ஏதேனும்‌ ஒன்று) மற்றும்‌ தயிசாதம்‌, ஒரு வேகவைத்த முட்டை, மாலை 4 மணிக்கு டீ/போன்வீட்டா/காய்கறி சூப்‌ மற்றும்‌ சுண்டல்‌, இரவு 8 மணிக்கு சப்பாத்தி/தோசை/கிச்சடி/தொட்டி, (ஏதேனும்‌ இரண்டு) காய்கறி குருமா, சட்னி, சாம்பார்‌, குழந்தைகளுக்கு பால்‌, அரிசி கஞ்சி மற்றும்‌ பிஸ்கட்‌ எப்போது கேட்டாலும்‌ வழங்கப்பட்டு வருகின்றது.

காலை, மதியம்‌ மற்றும்‌ இரவு உணவை தவிர இதர உணவு வகைகள்‌ மற்றும்‌ பானங்கள்‌ அனைத்தும்‌ இ.எஸ்‌.ஐ மருத்துவமனையில்‌ உள்ள நவீன மயமாக்கப்பட்ட சமையல்‌ கூடத்தில்‌ சுகாதாரமான முறையில்‌ தயாரித்து நோயாளிகள்‌, மருத்துவர்கள்‌, செவிலியர்கள்‌ மற்றும்‌ இதர பணியாளர்களுக்கும்‌ வழங்கப்படுகிறது என நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

மேலும் கோவை மாவட்டத்தில் அம்மா உணவகங்களின் செலவு பயன்பாட்டிற்காக, முன் தேதியிட்டு கடந்த ஜூன் 1 ஆம் தேதி அன்று ரூ.86. 19 இலட்சம்‌ ரூபாயினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்களிடம்‌ ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள தொகை விரைவில் வழங்கப்படும்‌ என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...