பரிசோதனை வெற்றியடைந்தால் வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு ஊசி இந்தியாவில் அறிமுகம்..!

பரிசோதனை வெற்றியடைந்தால், வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு ஊசி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி: பரிசோதனை வெற்றியடைந்தால், வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கொரோனா தடுப்பு ஊசி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை குணப்படுத்த மருந்து மற்றும் தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவை சேர்ந்த

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு ஊசி

சோதனை வெற்றியடைந்தால், வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்ய ஐ.சி.எம்.ஆர். திட்டமிட்டுள்ளது.

ஹைதராபாத்தில் இயங்கி வரும் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டறிந்த கொரோனா தடுப்பு மருந்தான "கோவாக்ஸின்" எனும் மருந்தை மனிதர்களிடம் சோதனை செய்ய அண்மையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது.

குறிப்பாக, இரண்டு கட்டங்களாக நடைபெறும் இதன் பரிசோதனை வரும் ஜூலை 7ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அந்த நிறுவனத்துக்கு ஐ.சி.எம்.ஆர். இயக்குநர் பல்ராம் பார்கவா சமீபத்தில் எழுதிய கடிதத்தில், பரிசோதனை முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் பரிசோதனை வெற்றியடைந்தால், ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 6.2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தடுப்பு ஊசி மருத்துவர்கள் மற்றும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...