கோவை அடுத்த குறிச்சி பகுதியில் தனிமையின் காரணமாக விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட முதியவர்!

கோவை: கோவை அடுத்த குறிச்சி பகுதியில் தனிமையின் காரணமாக விரக்தியில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை அடுத்த குறிச்சி பகுதியில் தனிமையின் காரணமாக விரக்தியில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை குறிச்சி காந்திஜி சாலையில் வசித்து வருபவர் சுப்ரமணி(59). இவரது மனைவி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காலமானார். இவரது ஒரே மகள் திருமணமாகி கரூரில் வசித்து வருகிறார். தனியாக இருந்து வந்த சுப்ரமணியை அவரது வீட்டின் அருகில் வசிக்கும் உறவினரான ஜுலி கவனித்து வந்துள்ளார்.

சுப்ரமணியின் மகள் மாதம் ஒரு முறை தந்தையை காண வருபவர், அவருக்கு தேவையான பணம் மற்றும் உதவிகளை செய்து தருவது வழக்கம். கடந்த சில மாதமாக அவரால் வர முடியாத சூழலில் தனிமையில் வசித்து வந்த சுப்ரமணி விரக்தியின் காரணமாக தடை செய்யப்பட்ட சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது உறவினர் ஜூலி அளித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனிமையின் காரணமாக முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...