கோவை: கோவை உக்கடம் பகுதியில் விவாகரத்து தர மனைவி மறுத்ததால் கத்தியால் கணவன் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை உக்கடம் புறவழி சாலை பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் டேவிட்-கல்யாணி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதனால் டேவிட் தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டு உள்ளார். கல்யாணி மறுக்கவே ஆத்திரமடைந்த டேவிட் கடந்த 1ம் தேதி இரவு 8 மணியளவில் ஜி.எம்.நகர் பள்ளிவாசல் அருகே மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கத்தியை கொண்டு தாக்கி உள்ளார்.
இதில் காயமடைந்த டேவிட்டின் மனைவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து, அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பெரியகடை வீதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.