கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பறக்கும் படையினர் அதிரடி ஆய்வு மேற்கொள்வர் - மாநகராட்சி ஆணையர் ஷரவன்குமார்‌ ஜடாவத்

கோவை: கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் அனைத்து வகையான கடைகளில் பறக்கும் படையினர் அதிரடி ஆய்வினை மேற்கொண்டு வருவதோடு, கொரோனா பரவலை தடுக்க துரித நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக மாநகராட்சி ஆணையர் ஷரவன்குமார்‌ ஜடாவத் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் அனைத்து வகையான கடைகளில் பறக்கும் படையினர் அதிரடி ஆய்வினை மேற்கொண்டு வருவதோடு, கொரோனா பரவலை தடுக்க துரித நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக மாநகராட்சி ஆணையர் ஷரவன்குமார்‌ ஜடாவத் தெரிவித்துள்ளார்.

கோவையில் கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், இது குறித்து மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் தெரிவிக்கையில், கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ்‌ கிருமியின்‌ தாக்குதலால்‌ பொதுமக்கள்‌ பாதிப்படையாத வகையிலும், நோய்த்‌ தொற்று தாக்கத்தை கட்டுப்படுத்தும்‌ விதமாகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறினார்.

மேலும் மாநகராட்சியின்‌ 5 மண்டலங்களிலும்‌ தனித்தனியே கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள்‌ அதிகம் கூடும்‌ இடங்கள்‌ மற்றும்‌ அனைத்து வகையான கடைகளில்‌ பறக்கும்‌ படையினர்‌ தினசரி களஆய்வும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

இதோடு கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகம்‌ மற்றும்‌ 5 மண்டலங்களிலும்‌ பணியாற்றும்‌ அதிகாரிகள்‌, பணியாளா்கள்‌ மற்றும்‌ அலுவலகத்திற்கு வரும்‌ பொதுமக்கள் அனைவருக்கும் முறையான உடல்‌ வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே அலுவலகத்திற்குள்‌ செல்ல அனுமதியளிக்கப்படுகிறது என கூறிய அவர், சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு வரும்‌ நபா்களின்‌ விபரங்கள்‌ பதிவேடுகள்‌ மூலமாக சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்‌, பொதுமக்களின்‌ அடிப்படைத்‌ தேவைகள்‌ மற்றும்‌ புகார்கள்‌ தொடர்பான மனுக்கள்‌ பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள்‌ தங்களின்‌ புகார்களை ஆணையாளர்‌, துணை ஆணையாளர்‌ மற்றும்‌ அதிகாரிகளிடம்‌ நேரில்‌ சந்தித்து தெரிவிப்பதற்கு பதிலாக காணொலி வாயிலாக பொதுமக்களிடம்‌ கலந்துரையாடி அவா்களது குறைகளை நிவா்த்தி செய்ய உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும் தனிஅலுவலர்‌ தஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...