திருப்பூர்: திருப்பூரில் மதுபான கடைகள் அரசு அனுமதியில்லாமல் இயங்குவதோடு சமூக இடைவெளியையும் முறையாக பின்பற்றாத காரணத்தினால், கொரோனா பரவும் அச்சத்தில் பொதுமக்கள் வாழந்துவருகின்றனர்.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் மதுபான கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி மதுபானம் வாங்கிச் செல்ல வேண்டும் எனவும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுபான கடைகள் செயல்படக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இதற்கு மாறாக திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டுவருகின்றனர். குறிப்பாக இதில் பல கடைகள் அரசின் அனுமதியில்லாமலும் இயங்கிவருகிறது.

மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முக கவசம் அணியாமல் குடிமகன்கள் மதுபான கூடத்தில் கூடுகின்றனர்.
தற்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் வைத்திருக்கும் மாவட்ட நிர்வாகம் இதனை தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், மதுபான கடைகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். அதிலும் பழைய பேருந்து நிலையம் தாராபுரம் சாலை கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதுபான கடைகள் அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் திருப்பூரில் கொரோனாவின் பாதிப்பு 120 ஆக இருந்த நிலையில் தற்போது 200 ஐ நெருங்கி வருகின்றது. எனவே இது போன்ற மதுபான கடைகளில் குடிமக்கள் அதிகம் கூடுவதால் மேலும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.