கோவை: கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின்படி மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் தனித்தனியே கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் அனைத்து வகையான கடைகளில் பறக்கும் படையினர் தினசரி களஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
இந்தநிலையில், மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் பறக்கும் படை குழுவினர்கள் 242 நபர்கள் மூலம் இன்று (02.07.2020) மாநகராட்சிப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் முகக்கவசங்கள் அணியாமலும், வருகைப் பதிவேடு பேணப்படாமலும், கிருமிநாசினி மருந்துகள் பயன்படுத்தாமலும், சமூக இடைவெளியினை பின்பற்றாமலும் இயங்கிய 761 கடைகளுக்கு மொத்தமாக ரூ.72,800/- ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மண்டல வாரியாக அபராத விவரங்கள்:
மேற்கு மண்டலத்தில் 281 கடைகளில் ரூ.36,100/-
கிழக்கு மண்டலத்தில் 67 கடைகளில் ரூ.5,900/-
மத்திய மண்டலத்தில் 56 கடைகளில் ரூ.15,800/-
வடக்கு மண்டலத்தில் 139 கடைகளில் ரூ.12,700/-
தெற்கு மண்டலத்தில் 218 கடைகளில் ரூ.2,300/-