மேட்டுப்பாளையம் அருகே உயிரிழந்த யானை துப்பாக்கியால் சுடப்பட்டு மூளை சேதமடைந்ததால் உயிரிழந்துள்ளது - மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ்

கோவை: மேட்டுப்பாளையம் அருகே விவசாய நிலத்தில் உயிரிழந்த யானை துப்பாக்கியால் சுடப்பட்டு மூளை சேதமடைந்ததால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே விவசாய நிலத்தில் உயிரிழந்த யானை துப்பாக்கியால் சுடப்பட்டு மூளை சேதமடைந்ததால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில் சமீபகாலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, யானைகள் வலசை செல்லும் காலம் என்பதால், பல்வேறு இடங்களில் இருந்து வந்த யானைகள் அங்கு தங்கியுள்ளது. பவானி ஆற்றில் தண்ணீர் உள்ளதால் மலைப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் தண்ணீருக்காகவும் உணவிற்காகவும் தேக்கம்பட்டி பகுதிக்கு நாள்தோறும் வருவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை தேக்கம்பட்டியில் யானைகள் முகாம் நடைபெற்ற பகுதிக்கு அருகே தனியார் தோட்டத்தில் காதில் ரத்தம் வழிந்த நிலையில் பெண் யானை ஒன்று உயிர் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்திருப்பது 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பதும், யானையின் காதுப் பகுதியில் ரத்தம் வழிந்த நிலையில் காயங்கள் உள்ளதால் துப்பாக்கியால் சுடப்பட்டதால் இந்த யானை உயிரிழந்தா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே உயிரிழந்த யானையின் உடல் பிரேத பரிசோதனை வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் யானையின் இடது காதுக்கு கீழ் பகுதியில் இருந்த காயத்தை ஆராய்ந்த போது அது துப்பாக்கி குண்டு பாய்ந்தற்கான அடையாளங்கள் இருந்ததால் தலைப்பகுதி முழுவதும் சோதனை செய்யப்பட்டதில், யானையின் மூளை பகுதியில் இருந்து துப்பாக்கி குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில்:

யானை உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு யானையின் காது அருகே இருந்த காயத்தின் அடிப்படையில் தலைப்பகுதி முழுவதும் சோதனை செய்ததில் மூளை பகுதியில் துப்பாக்கி குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், யானைக்கு மிக.அருகில் நின்று கொண்டு துப்பாக்கியால் சுட்டதால் இந்த குண்டு மண்டை எலும்புகளை துளைத்துக்கொண்டு மூளைப் பகுதியை சேதம் செய்ததால், சம்பவ இடத்திலே யானை உயிரிழந்துள்ளது.

யானை இழப்பு தொடர்பாக தோட்ட உரிமையாளர் ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் விளை நிலங்களில் யானைகள் அடிக்கடி புகுந்து சேதம் ஏற்படுத்துவதால் தோட்ட உரிமையாளர்கள் இதுபோன்று கள்ளத் துப்பாக்கிகள் வைத்து அவ்வப்போது யானைகளை விரட்டி வருவதாகவும், இது குறித்து வனத்துறையினர் தனி குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு கள்ளத் துப்பாக்கி வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுத்து, கைது செய்ய வேண்டுமென விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...