கோவையில் இருந்து சொந்த நாட்டுக்கு செல்ல தமிழக அரசு உதவிட வேண்டும் - இலங்கையை சேர்ந்த கர்ப்பிணி பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவை: சொந்த நாட்டுக்கு செல்ல தமிழக அரசு உதவிட வேண்டும் என இலங்கையைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.


கோவை: சொந்த நாட்டுக்கு செல்ல தமிழக அரசு உதவிட வேண்டும் என இலங்கையைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் சந்திர மோகனா, பாஸ்கரன் தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் கடந்த நிலையில் குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் உள்ள தனியார் செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்காக தனது தாயார் காந்திமதியுடன் கடந்த டிசம்பர் மாதம் வந்துள்ளார்.

சிகிச்சை பெற்று வந்த சந்திர மோகனா தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார். கொரொனா தொற்று பிரச்சனை காரணமாக விமானங்கள் இல்லாததால் சொந்த நாட்டிற்குச் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்தார்.

சிகிச்சை காலத்தில் கோவை புலியகுளம் பகுதியில் தனது தாயாருடன் 5000 ரூபாய்க்கு வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்ததாகவும் தற்போது போதிய நிதி வசதி இல்லாமல் கஷ்டப்படுவதை கண்டு அருகில் வசித்து வருபவர்கள் உதவி செய்து வருவதாக கூறினார்.

மேலும், தனது கணவர் கடந்த மார்ச் மாதம் ஊருக்கு திரும்பிவிட்டதாக தெரிவித்த அவர், தனக்கும் தனது தாய்க்கும் இந்த மாத இறுதியில் விசா முடிய இருப்பதாக தெரிவித்தார். எட்டு மாதமான கர்ப்பிணி பெண்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதியில்லை என்று உள்ள நிலையில் தன்னையும் தன் தாயையும் உடனடியாக இலங்கை செல்ல அனுமதி வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.



அதேபோல, குழந்தை இந்தியாவில் பிரசவித்தால் குழந்தைக்கான இலங்கை குடியுரிமை பெறுவதில் நடைமுறை சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்றும் இது தொடர்பாக தங்களுக்கு உதவ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் சந்திரமோகனா மனு அளித்தார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...