நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு முதல் பலி - 67 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நீலகிரி: கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 67 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நீலகிரி: கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 67 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று மாலை வரை 107 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்களில் 39 பேர் குணமாகி வீடு திரும்பினர். மீதமுள்ள 68 பேரில் 44 பேர் உதகை அரசு மருத்துவமனையிலும் 24 பேர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நீலகிரி மாவட்டம் கீரின்பீல்டு பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இவருக்கு சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகளும் இருந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.



இவரது உயிரிழப்பின் காரணமாக கிரீன் பீல்டு பகுதியில் சுகாதாரத்துறையினர் மேலும் சுகாதாரப் பணியினை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...