கோவை மாநகராட்சியில்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சியில்‌, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான தெலுங்குபாளையம்‌, செல்வபுரம்‌ ஹவுசிங்யூனிட்‌, காந்திபார்க்‌ தெலுங்குவீதி, ஐயப்பாநகர்‌ செட்டிவீதி, ஆகிய பகுதிகளில்‌ இன்று மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

கோவை: கோவை மாநகராட்சியில்‌, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான தெலுங்குபாளையம்‌, செல்வபுரம்‌ ஹவுசிங்யூனிட்‌, காந்திபார்க்‌ தெலுங்குவீதி, ஐயப்பாநகர்‌ செட்டிவீதி, ஆகிய பகுதிகளில்‌ இன்று மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

இந்த ஆய்வின்‌ போது மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மதுராந்தகி, துணை இயக்குநர்‌ (சுகாதாரப்பணிகள்‌) ரமேஷ்குமார்‌, மாநகராட்சி நகர்‌ நல அலுவலர்‌ ராஜன்‌ மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ்‌ தொற்றினை கட்டுப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில்‌, கோவை மாவட்ட நிர்வாகத்தின்‌ சார்பில்‌ வைரஸ்‌ தொற்று தடுப்பு நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வருகிறது.

வெளிமாநிலங்கள்‌, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வாகனங்கள்‌ மற்றும்‌ இரயில்கள்‌ மூலம்‌ கோவை மாவட்டத்திற்குள்‌ வருகை புரிந்தவர்கள்‌ மூலம்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. தற்போது இரயில்‌, விமானச்‌ சேவைகள்‌ இல்லாத நிலையில்‌ வெளியிலிருந்து கோவை மாவட்டத்திற்கு வருபவர்களின்‌ எண்ணிக்கை குறைந்துள்ளது.

மேலும்‌, ஏற்கனவே வந்தவர்களுக்கு அதிகளவில்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று குறித்த பரிசோதனைகள்‌ மேற்கொள்ளப்பட்டதுடன்‌, தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்‌ கொள்ளவும்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்‌, தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின்‌ குடும்பத்தினர்‌, அருகில்‌ வசிப்போர்‌, தொடர்பில்‌ இருந்த நபர்கள்‌ ஆகியோருக்கு தொடர்‌ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில்‌ 9 இடங்கள்‌ தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில்‌ கோயம்புத்தூர்‌ மாநகரப்பகுதிகளான

தெலுங்குபாளையம்‌, செல்வபுரம்‌ ஹவுசிங்யூனிட்‌, காந்திபார்க்‌ தெலுங்குவீதி, ஐயப்பாநகர்‌ செட்டிவீதி, ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்‌ இன்று நேரில்‌ பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள்‌, அப்பகுதிகளை தொடர்ந்து கண்காணிப்பு வளையத்திற்குள்‌ வைத்திருக்கவும்‌, அப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசியப்பொருட்கள்‌ தடையின்றி கிடைப்பதற்கும்‌ மாநகராட்சி மற்றும்‌ வருவாய்‌ துறை அலுவலர்கள்‌ உறுதி செய்திட உத்தரவிட்டதுடன்‌, இப்பகுதிகளில்‌ தினமும்‌ கிருமிநாசினிகள்‌ மூலம்‌ சுத்தம்‌ செய்யவும்‌ உத்தரவிட்டார்‌.

மேலும்‌, அப்பகுதியில்‌ உள்ள வீடுகள்‌ மற்றும்‌ விடுதிகளில்‌ தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம்‌ அவர்களின்‌ உடல்நலம்‌ குறித்து கேட்டறிந்ததுடன்‌, அவர்களை தொடர்ந்து கண்காணித்திட வருவாய்த்துறை மற்றும்‌ சுகாதாரத்துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி இ.ஆ.ப., கேட்டுக்கொண்டார்‌.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...