கோவை தொண்டாமுத்தூரில் விதிமுறைகளை மீறி உடற்பயிற்சி கூடம் இயங்கி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு; போலீசார் விசாரணை!

கோவை: கோவை தொண்டாமுத்தூரில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடம், விதிகளை மீறி இயங்கி வருவதாக பொதுமக்கள் அளித்த குற்றச்சாட்டின் பேரில் அதன் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை தொண்டாமுத்தூரில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடம், விதிகளை மீறி இயங்கி வருவதாக பொதுமக்கள் அளித்த குற்றச்சாட்டின் பேரில் அதன் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை அடுத்த தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள வணிகவளாகத்தில் தனியாருக்கு சொந்தமான உடற்பயிற்சிக்கூடம் இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனோ காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மூடபட்டிருத்த இந்த உடற்பயிற்சி கூடம் கடந்த சில நாட்களாக அரசின் உத்தரவை மீறி செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



இந்நிலையில், இன்று அதிகாலை போலீசாருடன் அங்கு சென்ற பொதுமக்கள், கொரோனா ஊரடங்கை மீறி செயல்பட்டு வரும் உடற்பயிற்சி கூடத்தின் மூலம் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

அதன் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளரான சசிக்குமாரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விசாரித்த போது, அரசின் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறி உடற்பயிற்சி நிலையம் செயல்படுவதாக அப்பகுதி பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் ஜிம் உரிமையாளரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்தனர். 

மேலும், உடற்பயிற்சி கூட உரிமையாளர் அவர் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததாகவும், இருப்பினும் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை கடைபிடிக்கும்படி கேட்டுக் கொண்டதாக தெரிவித்தனர். அதேபோல, உடற்பயிற்சி கூடங்களை திறக்க வேண்டாம் என்று உடற்பயிற்சி சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...