கோவை: மேட்டுப்பாளையத்தில் உணவு தேடி வனத்தை விட்டு வெளியே வந்த காட்டுயானை காதில் ரத்தம் வடிந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் உணவு தேடி வனத்தை விட்டு வெளியே வந்த காட்டுயானை காதில் ரத்தம் வடிந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் கூட்டம் அவ்வப்போது மலை அடிவார விவசாய நிலங்களுக்குள்ளும் கிராமங்களுக்குள்ளும் புகுந்து வந்தது.
இந்த நிலையில், இன்று வனத்தை விட்டு வெளியே வந்த பெண் காட்டு யானை ஒன்று தேக்கம்பட்டி அருகே உள்ள ஒரு விவசாய நிலத்தில் உணவு மற்றும் தண்ணீரினை தேடி வந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.
பத்திரகாளியம்மன் கோவில் பின்புறம் உள்ள ராமசாமி என்பவரது தோட்டத்தில் இறந்துள்ள பெண் காட்டு யானைக்கு காதில் ரத்தம் வழிந்தபடி உள்ளதால் யானை இயற்கையாக உயிரிழந்ததற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால் மர்மநபர்களால் யானை தாக்குதலுக்கு உள்ளானதா என மேட்டுப்பாளையம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து, கோவையில் இருந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் யானைக்கு பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது. பரிசோதனைக்கு பின்னரே யானையின் உயிரிழப்பிற்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.