கோவை: கோவை மாவட்டம் டவுன்ஹால் பகுதியிலுள்ள தனியார் கடைகளில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில், கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தொழிற்சாலைகள், நகைக்கடைகள், உணவகங்கள், மளிகை கடைகள் ஆகியவற்றில் பணி மேற்கொள்ளும் இடங்களில் முக கவசம், உரிய சமூக விலகல் நடைமுறைகளை தவறாது பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 100 சதவிகிதம் குளிர்சாதன வசதி பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், நேற்று டவுன்ஹால் பகுதியில் உள்ள தனியார் கடைகளில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வாடிக்கையாளர் முகக் கவசம் அணிவதையும் சமூக இடைவெளி கடைபிடிப்பதையும் உறுதி செய்வதுடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு, வெப்பபரிசோதனை மேற்கொள்வதுடன், கைகளை சுத்தமாக கழுவுதற்கு சோப் ஆயில் உள்ளிட்ட வசதிகளை முறையாக அமைத்திடவும், அரசு வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்றவும் கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தினார்.