திருப்பூர்: ராணுவ வீரர்கள் உயிர் இழந்த போது அமைதி காத்த திமுக தற்போது சாத்தான்குளம் விவகாரத்தில் அரசியலாக்க முயற்சிப்பதாக திருப்பூரில் பாஜக மாநில தலைவர் முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் வடக்கு மற்றும் தெற்கு பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த பாஜகவின் மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விவகாரத்தில் உலக நாடுகளே திணறி வரக் கூடிய சூழ்நிலையில் மத்திய பாஜக அரசு நோயை கட்டுப்படுத்தும் பொருளாதார ரீதியிலும் வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், சாத்தான்குளம் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை அறிவித்தது வரவேற்கத்தக்கது என்றார்.
மேலும், இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழப்பிற்கெல்லாம் அமைதி காத்த திமுக தற்போது சாத்தான் குளம் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனவும் சீனா பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு எனவும் மத்திய அரசு பாதுகாப்பு வழிமுறைகளுக்காக தீர்க்கமான முடிவுகளை எடுத்து வருகிறது என்று கூறினார்.