கோவையில் 16 வயது சிறுமியிடம் திருமண ஆசைகாட்டி கடத்திச் சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

கோவை: கோவையில் 16 வயது சிறுமியிடம் திருமண ஆசைகாட்டி கடத்திச் சென்ற இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் 16 வயது சிறுமியிடம் திருமண ஆசைகாட்டி கடத்திச் சென்ற இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை, குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி காணாமல் போனதாக கடந்த 28ம் தேதி சிறுமியின் பெற்றோர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த குனியமுத்தூர் காவல்துறையினர் காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர்.

இந்நிலையில், காணாமல் போன சிறுமியும் கோவை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹர்ஷாத் என்ற இளைஞரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தது தெரியவந்தது. இது குறித்தான விசாரணையில் ஹர்ஷாத் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று கோவையில் உள்ள தனது நண்பர் வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, ஹர்ஷதை கைது செய்த காவல்துறையினர் சிறுமியை பத்திரமாக மீட்டனர். மேலும், ஹர்ஷாத் மீது கடத்தல் மற்றும் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...