கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் மருத்துவமனை தேவை - மாவட்ட ஆட்சியருக்கு நா. கார்த்திக் எம்எல்ஏ வேண்டுகோள்

கோவை: கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் மருத்துவமனை தேவைப்படும் என்று கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை: கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் மருத்துவமனை தேவைப்படும் என்று கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அவர் வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :-

கோவை மாவட்டத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. சோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் நிலைமை இருக்கிறது.

தற்போது உள்ள சூழலில் தினமும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய் பரிசோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் நோய் பரவல் நிலவரம் கண்டறிந்து நோயாளியை உடனடியாக மீட்க முடியும்.

வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நோய் பாதிப்பு உள்ளவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நோய் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை நேற்று வரை 528 ஐ கடந்துவிட்டது. இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சுமார் 500 படுக்கை வசதிகள் மட்டுமே இருப்பதாக சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர். இந்த மருத்துவமனை ஒரு வார காலத்துக்குள் நோயாளிகளால் நிரம்பி விடும் வாய்ப்பு உள்ளது.

மேலும், நோய் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற வந்தால் அவர்களை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டி இருக்கும். அரசு மருத்துவமனையிலும் மிக குறைவான படுக்கை வசதிகள் மட்டுமே இருப்பதாக தெரிகிறது.

அங்கு வேறு நோயாளிகளுடன் கொரோனா நோய் பாதித்தவர்களை அனுமதிப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, கொரோனா நோய்க்காக வேறு ஏதாவது மருத்துவமனையில் தனி வார்டு அமைத்து சிகிச்சை வசதியை மேம்படுத்த வேண்டிய கட்டாய சூழல் உருவாகியுள்ளது.

தற்போது தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதித்து, அங்கே சிகிச்சை பெறுவதாக தெரிகிறது. வசதிக்குறைவான ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனையில் அதிக தொகை செலுத்தி சிகிச்சை பெற முடியாத சூழல் இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் தமிழக அரசின் பொது மருத்துவ காப்பீடு அட்டையை பயன்படுத்தி சிகிச்சை பெற அனுமதி வழங்கப்படுவதில்லை.

அரசு பொது மருத்துவ காப்பீடு அட்டை தொடர்பாக சுகாதாரத்துறையினர் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மருத்துவ காப்பீடு அட்டையை பயன்படுத்த பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய சுகாதாரத் துறையினர் முன்வரவில்லை.

நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை தர கோவை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் சிறப்பு வார்டு தயார் செய்யலாம்.‌ தனியார் மருத்துவமனைகளில் உள்ள வெண்டிலேட்டர்களை தேவையான அளவு கேட்டுப் பெறலாம். நோய் அறிகுறியுடன் வருபவர்களை தனிமைபடுத்துவதற்கு ஊருக்கு ஒதுக்குப்புறமான மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ள அடுக்குமாடிகள் அல்லது கல்லூரி கட்டிடங்களை பயன்படுத்தலாம்.

வரதராஜபுரம் இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நோய் அபாய சூழல் இருக்கிறது. இங்கே தினமும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.‌ இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், நோய் அபாயம் இன்றி வாழ வழிவகை செய்ய வேண்டும்.

கொரோனா நோயில் இருந்து மக்களை பாதுகாக்க சுகாதாரத்துறையினர் முழு முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், சாத்தான்குளத்தில் சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...